விவாகரத்துக்கு பின் மகன்களை தனுஷிடம் இருந்து பிரித்தாரா ஐஸ்வர்யா!! தனியாக உட்கார்ந்த சோகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் மகளாக ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன் இருக்கும் நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிக்கையை வெளியிட்டனர்.
தனுஷும் தன் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஐஸ்வர்யா இயக்கத்தில் ஈடுபட்டு லால் சலாம் படத்தினையும் முடித்துவிட்டார். தனுஷுடன் ஐஸ்வர்யா சேருவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், உதவி இயக்குனருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. பல நட்சத்திரங்கள் படத்தை பார்த்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா, ரோஹினி திரையரங்கிற்கு ஜெயிலர் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்திருக்கிறார்.
அவரை தொடர்ந்து நடிகர் தனுஷுன் ரோஹினி தியேட்டருக்கு ஜெயிலர் படம் பார்க்க சென்றுள்ளார். மேலும் தனுஷ் மகன்களான யாத்ரா, லிங்காவும் ஐஸ்வர்யாவுடன் தான் படத்தை பார்த்திருக்கிறார்கள்.
இதை பார்த்த பலர் தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்துவிட்டாரா ஐஸ்வர்யா என்று கேள்வி எழுப்பியும் தனுஷை யாத்ரா, லிங்கா பார்த்தார்களா என்றும் இணையத்தில் கேள்விகளாக தனுஷ் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
ஆனால், தனுஷ் தியேட்டரில் கடைசி இடத்திலும் ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்துடன் யாத்ரா, லிங்காவும் ஜெயிலர் படத்தை பார்த்துள்ளனர்.

