முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு!! தனுஷை விளக்குமாறால் வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் அசுர நடிகராக திகழ்ந்து ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய திறமையை காட்டி வருபவர் நடிகர் தனுஷ்.18 ஆண்டுகளுக்கு பின் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்தது தான் என்று கூறி வந்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் தனுஷ் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். சமீபகாலமாக தனுஷ் பற்றிய பாசிட்டிவ் செய்திகளை விட நெகட்டிவ் செய்திகள் தான் அதிகளவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஐபி படத்தில் நடிகை சரண்யா பொண்வண்ணன், ஒரு காட்சியில் தனுஷை துடைப்பத்தால் அடிக்கும் காட்சி பற்றி பகிர்ந்திருக்கிறார்.
அந்த காட்சியில் என்னை துடைப்பத்தால் அடிக்கும் காட்சியை கேட்டு, நான் எப்படி உங்களை அடிக்கிறது, துடைப்பால போய் எப்படி அடிக்கிறது, வலிக்குமே என்றெல்லாம் சரண்யா சொன்னாங்க.
ஆனால் ஆக்ஷன்னு சொன்னதும் பட்டு பட்டுன்னு அடிச்சிட்டாங்க. பேசுனதை பார்த்தால் அடிக்கவே மாட்டீங்கன்னு நினைச்சா, இப்படி அடிச்சிட்டீங்களேன்னு சொன்னேன். அதற்கு அவங்க, ஒரே டேக்கில் ஓகே ஆகனும்ல என்று சொல்லிட்டாங்க என்று காமெடியாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் பேசிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..