தனுஷுக்கு அடி மேல் அடி.. அவருக்கு மட்டும் ஏன் இப்படி
Dhanush
By Parthiban.A
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர். தற்போது ஹிந்தி, ஹாலிவுட் சினிமாவிலும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் கெரியரின் உச்சத்தில் இருந்த நேரத்தில் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர்கள் நடுவில் என்ன தான் பிரச்சனை என தற்போது வரை கூறவில்லை. அதனால் தனுஷ் பெயர் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.
இந்நிலையில் தனுஷுக்கு மேலும் ஒரு அடியாக அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக்கை திடீரென நீக்கி இருக்கிறார்கள்.
அது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவருக்கு மட்டும் ஏன் இப்படி அடி மேல் அடி வருகிறது என ஷாக் ஆனார்கள்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு பின் தற்போது மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டு இருக்கிறது.