இந்த பக்கம் ராதிகா, அந்த பக்கம் கமல் மகள்!! நடிகைகளின் நடுவே உட்கார்ந்திருக்கும் நடிகர் தனுஷ்..
90ஸ் காலக்கட்டத்தில் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் பலவிதமான பார்ட்டிகளை இரவு நேரத்தில் வைத்து கும்மாளம் போடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகர் நடிகைகள் இரவு பார்ட்டியில் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை பாடகி சுசித்ரா, சுச்சி லீக்ஸ் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சுசித்ரா பேட்டிகள் கொடுத்து நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயம் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தை பற்றி பகிர்ந்து வருகிறார்.
இந்த விஷயம் இணையத்தில் அதிகளவில் டிரெண்டானதை அடுத்து, எந்த விஷயம் என்றாலும் அதில் தனுஷ் கூட இருப்பார் என்று நெட்டிசன்கள் மனதில் தோன்றியுள்ளது. இதனால் தனுஷ் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
தனுஷ் ஓகே, தனுஷ்க்கு மேல இருக்கிறவன் யாரு?!? ? pic.twitter.com/yAITgJDNmI
— முத்து (@Muthuhere3) May 28, 2024
அந்தவகையில் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டியொன்றில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்துள்ளார். அப்போது பல நடிகைகள் உடகார்ந்திருந்த போது நடிகர் தனுஷ் அவர்களின் நடுவே உட்கார்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராதிகா, காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், ராய் லட்சுமி உள்ளிட பல நடிகைகள் உட்கார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.