கூலி ரிலீஸ்!! ஒரே இடத்தில் மகன்களுடன் தனுஷ், ஐஷ்வர்யா!! சந்தோஷத்தில் முன்னாள் மருமகன்..
கூலி ரிலீஸ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, செளபின் ஷாஹிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள படம் கூலி.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுதும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் கூலி படத்தின் முதல் காட்சிகள் ஆரம்பித்து ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
தனுஷ், ஐஷ்வர்யா
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் ரசிகரும் முன்னாள் மருமகனுமான தனுஷ், தன்னுடைய மகன்களுடன் சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கில் கூலி படம் பார்க்க வந்துள்ளார்.
அந்த திரையரங்கில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது குடும்பத்துடன் படத்தை பார்க்க வந்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தனுஷ், திரையரங்கின் வெளியில் வந்ததும், மகிழ்ச்சியோடு, சிரிப்புடன் Thumbs Up கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி, காரில் சென்றுள்ளார்.
.@dhanushkraja sir gives 🔥👍 Blockbuster Response to Audience! #Coolie Thalaivar #Rajinikanth @sunpictures @Dir_Lokesh #Dhanush pic.twitter.com/Oar7i13N1W
— Chowdrey (@Chowdrey_) August 14, 2025