என்னது தோழியா? தோழின்னு கூப்பிட்ட தனுஷ்! ஐஸ்வர்யா ரஜினி கொடுத்த பதிலால் ஷாக்காகும் ரசிகர்கள்

divorce dhanush tamilactor aishwaryarajinikanth payani
By Edward Mar 17, 2022 01:09 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்.

18 வருட சினிமா வாழ்க்கையில் இரு ஆண் பிள்ளைகளோடு வாழ்ந்த பிறகு விவாகரத்து பெறுவதாக அறிவித்தது சினிமா திரையுலகையே அதிரவைத்தது. இருவரையும் சமாதானப்படுத்துவதில் ரஜினி உட்பட இரு குடும்பத்தினரும் போராடி வந்தனர்.

ஆனால் எதுவும் எடுபடவில்லை என்று அவர்கள் வழியில் விட்டுவிட்டனர். இதையடுத்து இருவரும் தங்கள் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான பயணி மியூசிக் ஆல்பம் வீடியோ ரஜினிகாந்தால் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியானது.

இதற்கு ரஜினி, மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அந்த வீடியோ பார்த்து வாழ்த்துக்கள் அன்பு தோழி ஐஸ்வர்யா என்று அவரை டேக் செய்து பாரட்டியுள்ளார் முன்னாள் கணவர் நடிகர் தனுஷ். இதை கண்ட தனுஷின் ரசிகர்கள் உண்மையில் விவாகரத்து கண்ஃபார்ம் என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு ஐஸ்வர்யா நன்றி தனுஷ், Godspeed என்று கூறி பதிலளித்துள்ளார்.