தனுஷிடம் இருந்து கொஞ்சகொஞ்சமா குறையும் மரியாதை!! சூப்பர் ஸ்டாருக்கு 2021 மருமகனாக போட்ட வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதன்பின் கணவருக்கு ஆறுதலாக இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அறிக்கை மூலம் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன் பின் தற்போது, லால் சலாம் என்ற படத்தினை இயக்க பூஜையும் போட்டுள்ளார். விஷ்ணுவிஷால், விக்ரந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.
இன்று டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இந்திய பிரபலங்கள் நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் என வாழ்த்துக்களை கூறி குவித்து வந்துள்ளனர்.
Happy birthday THALAIVA ???
— Dhanush (@dhanushkraja) December 12, 2022
இந்நிலையில் நடிகர் தனுஷும் தன் பங்கிற்கு முன்னாள் மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று கூறியதோடு கைக்கூப்பி வணக்கம் கூறும் ஸ்மைலியை போட்டு வாழ்த்துயுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு ஒரு மருமகனாக, மை தலைவா, என்றுமே ஒரேவொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், லவ்யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார். இதனை பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனுஷிடம் மரியாதை குறைகிறது என்று கூறி வருகிறார்கள்.
Happy birthday my thalaiva !! The one and only SUPERSTAR RAJINIKANTH sir .. love you so much ❤️❤️❤️❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 11, 2021