சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.. தனுஷுக்கு மட்டும் ஏன் இப்படி

Dhanush
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகர் தனுஷ் என்றாலே தற்போது சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தான் என்றாகிவிட்டது. அவர் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார் அவர்.

அதன் பிறகு அவர் தனியாக மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார், அவருக்கு போட்டியாக ஐஸ்வர்யாவும் மகன்கள் பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் தனுஷ் எங்கள் மகன் என வயதான தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதுவும் நடந்து வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தனுஷுக்கு சொந்தமாக Wunderbar Films யூடியூப் சேனல் சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டு விட்டது. அது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.. தனுஷுக்கு மட்டும் ஏன் இப்படி | Dhanush Wunderbar Films Youtube Channel Is Back

தனுஷ் படங்கள் தயாரிப்பதில்லை என்றாலும் ரௌடி பேபி பாடல் உட்பட பழைய வீடியோக்கள் பல அந்த சேனலில் தான் இருந்தன.

இந்நிலையில் இன்று அந்த சேனல் மீட்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

இப்போது டைட்டிலை படியுங்க. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.