என் குடும்பமே வேண்டாம்னு சொன்னாங்க...ஆனா நான் தான்!! தனுஷ் ஓபன் டாக்..
தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ராயன் மற்றும் குபேரா என இரு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என்ற படங்களில் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டியொன்றில், பொல்லாதவன் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்று நிராகரித்தனர்.
என் குடும்பமே வேண்டாம்னு
எனக்கு கதை பிடித்திருந்தாலும் என்னுடன் இருப்பவர்களும் சரி, என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சரி, பொல்லாதவன் படத்தை பண்ண வேண்டாம் என்று சொன்னார்கள். யாருமே அப்படத்துக்கு சப்போர்ட் செய்யவில்லை.
இருந்தாலும் எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்ததால் வெற்றிமாறனிடம், யாருமே படத்தில் என்னை நடிக்குமாறு சொல்லவில்லை. எல்லோருமே நடிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்.
இப்படம் வெற்றி பெற்றால் நாம் கெத்தாக இருக்கலாம், ஒருவேளை தோற்றுவிட்டால் அப்போவே சொன்னேன்ல என்று சொல்வார்கள். இருந்தாலும் இந்த படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று வெற்றிமாறனிடம் சொன்னதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
அதன்பின் அப்படம் மிகப்பெரிய வெற்றியை தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.