தனுஷுக்கு வில்லனே SK!! அவருக்கே வில்லன் யாரா இருப்பார்!! புது ரூட் போடும் பிரபலம்..

Dhanush Santhanam Sivakarthikeyan Gossip Today Soori
By Edward May 29, 2024 03:33 AM GMT
Report

நடிகர் தனுஷின் 3 படத்தின் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகை சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சந்தானம் தான் நடிக்க கமிட்டாகி, அதன்பின் சிம்பு தான் தன்னை அறிமுகப்படுத்தினார். எப்படி தனுஷ் படத்தில் நடிப்பது, அவர் கோபித்துக் கொள்வார் என்று நினைத்து அப்படத்தில் இருந்து சந்தானம் விலகினார்.

தனுஷுக்கு வில்லனே SK!! அவருக்கே வில்லன் யாரா இருப்பார்!! புது ரூட் போடும் பிரபலம்.. | Dhanushs Villain S K Who Will Be His Villain Bismi

பின் யாரை போடலாம் என்று தனுஷ் தேடும் போது மெரினா படத்தில் நடித்த பையன் நன்றாக நடிக்கிறார் என்று சிவகார்த்திகேயனிடம் பேசி கமிட் செய்தார். படத்தில் நடித்து தனி கிளாப்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் படங்களை எடுக்கிறார். அப்படி தனுஷால் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒருக்கட்டத்தில் நம்ம பேச்சை கேட்டுக்கிட்டு இருப்பான்னு நினைத்த தனுஷையே நிராகரிக்கிற அளவிற்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். தனுஷ் ஆபிஸ்-க்கு எதிரே பில்டிங் போட்டு இவர் ஆபீஸ் போடுகிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் சூரியை தூக்கிவிடணும்னு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

அது தான் கொட்டுக்காளி. நாளை சூரிக்கும் 4 படங்கள் ஹிட்டாகிவிட்டால் சிவகார்த்திகேயனை எப்படி நினைப்பார் சூரி என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.