பட வாய்ப்புகள் இல்லை.. இன்ஸ்டா மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தர்ஷா குப்தா..
Instagram
Dharsha Gupta
By Kathick
சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் எதுவும் வரவில்லை.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அதில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
மேலும் இன்ஸ்டாகிராமில் Subscription என்கிற பெயரில் மாதம் ரூ. 440-க்கு ஸ்பெஷல் பதிவுகளை அவர் கொடுத்து வருகிறாராம்.
இந்த Subscription-ல் இதுவரை 838 பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதிலிருந்து மட்டுமே மாதம் ரூ. 3.6 லட்சம் நடிகர் தர்ஷா குப்தா சம்பாதித்து வருகிறார்.