ஒரு பக்கம் போட்டோஹுட்! மறுப்பக்கம் வியக்கவைக்கும் நடிகை தர்ஷாவின் செயல்..

By Edward Jun 01, 2021 09:19 AM GMT
Report

சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி மூலம் அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியல் நடிகையாக அறிமுகமானாலும் பெரிய பிளாட்பார்மை கொடுத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமீபத்தில், இந்நிகழ்ச்சி பெரியளவில் டிஆர்பியை கைப்பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி போட்டது.

அந்த அளவிற்கு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது. அதற்கு காரணம் சமையல் செய்வதை காமெடி நிகழ்ச்சியாக சிரிக்கவைத்தது தான். அந்தவகையில் தர்ஷா இந்நிகழ்ச்சி மூலம் நல்ல ஒரு இடத்தினை பிடித்தார்.


இதற்கிடையில் க்ளாமர் போட்டோஹுட் எடுத்து ரசிகர்களையும் ஈர்த்து வந்த தர்ஷா, கொரோனா லாக்டவுனால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமான முழு ஊரடங்கு, ஜுன் வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை விட கொடுமையானது பசியால் வாடும் மக்களின் நிலைமை - உதவிக்கரம் நீட்டுவோம் என்று கூறி தனக்கு முடிந்தவரை உதவி செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.