நடிகர் அஜித்திற்கு தல என பெயர்வர காரணம் இதுதானா..இணையத்தில் வைரலாகும் இயக்குனர் முருகதாஸின் புது theory!

ajith thala AR murugadas
By Jeeva Nov 07, 2021 12:30 PM GMT
Report

நடிகர் அஜித்திற்கு தல என்னும் அடைப்பெயர் அவர் நடித்து வெளியான தீனா படத்தில் இருந்து தான் கிடைத்தது.

இந்த படத்தில் வரும் 'தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது' என்னும் புகழ்பெற்ற வசனம் பேசியது முதல் தான் ரசிகர்கள் அஜித்தை தல என பாசமாக அழைக்க தொடங்கினர்.

படத்தில் தல என முதல் முதலாக அஜித்துடன் சேர்ந்து நடித்த மகாநதி ஷங்கர் கூறியிருப்பார். ஆனால் அந்த வார்த்தை எப்படி படத்தில் இடம்பெற்றது என்ற புதிய தகவலை இயக்குனர் முருகதாஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவரின் நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தில் இருந்து தான் அந்த வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்னும் சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார்.