கமல் ஹாசன் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!! கடைசி வரை நிறைவேறாமல் போன ஆண்டவரின் ஆசை

Kamal Haasan Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 02, 2023 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா இந்த அளவிற்கு வளர கமலின் பங்கும் உண்டு.

கமலுடன் இணைந்து பணியாற்ற பல பிரபலங்கள் ஆசைப்படுவார்கள். இந்த நிலையில் கமல் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க ரொம்ப ஆசைப்பட்டு இருக்கிறார். தற்போது அது குறித்து பார்க்கலாம் வாங்க.

கமல் ஹாசன் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!! கடைசி வரை நிறைவேறாமல் போன ஆண்டவரின் ஆசை | Dhilip Kumar Refused To Act With Kamal Haasan

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1992 -ம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கமலுடன் சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி நடித்து இருப்பார். தற்போது வரை இந்த படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கமல் ஹாசன், தேவர் மகன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டாராம். அந்த படத்தில் சிவாஜி நடித்து இருந்த கதாபாத்திரத்தில் திலிப்குமாரை நடிக்கவைக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் வயது முதிர்ச்சி காரணத்தால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் திலிப் குமார். கமலின் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.