பிரம்மாண்டமான புதிய கார் வாங்கியுள்ள தொகுப்பாளினி டிடி.. விலை எவ்வளவு தெரியுமா
காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில் டிடிக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு, சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தவறாக அமைந்துவிட்டது. அதனால் மற்றொரு சிகிச்சை செய்ய அதுவும் சரியாக வரவில்லை; இப்படி காலில் ஏற்பட்ட பிரச்சனையால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும், தற்போது இசை வெளியீட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், தொகுப்பாளினி டிடி புதிதாக Lanson Toyota காரை வாங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரின் விலை ரூ. 20 லட்சம் ரூ. 35 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.