அவரை விட எனக்குதான் அதிக பாதிப்பு!! முதல் முறையா விவாகரத்து வாழ்க்கை பற்றி பேசிய டிடி

Dhivyadharshini Indian Actress Tamil Actress
By Dhiviyarajan Apr 21, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் vj டிடி. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அவரை விட எனக்குதான் அதிக பாதிப்பு!! முதல் முறையா விவாகரத்து வாழ்க்கை பற்றி பேசிய டிடி | Dhivyadharshini Speak About Her Divorce

இதையடுத்து டிடியின் இரண்டாம் திருமணம் பற்றி பல வதந்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி, தனக்கு நடந்த விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் உடல் நல பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு தான் கொண்டிருக்கிறேன். இருப்பினும் நான் சிறப்பாக செயல்படுகிறேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய கற்று கொடுத்தது, அந்த நேரத்தில் நான் சந்தோசமாக இருந்தால் போதும் என்று அந்த முடிவை எடுத்தேன்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுடன் நேர்காணலுக்கு தயாராக சமயத்தில் எனக்கு விவாகரத்து உறுதியானது என்பது தெரியவந்தது. அப்போது எல்லாமே முடிந்துவிட்டது என்பதை என் மனதில் நான் உணர்ந்தேன். உண்மையில் விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட, என்னை அதிகமாக பாதித்தது என்று டிடி கூறியுள்ளார்.