அனிருத் ஓகே சொல்லியும் அந்த விஷயத்தை செய்யாத டிடி.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

Andrea Jeremiah Anirudh Ravichander Dhivyadharshini Actors
By Dhiviyarajan Jun 02, 2024 09:30 AM GMT
Report

கோலிவுட்டில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகை மற்றும் பாடகிகள் கிசுகிசுப்பில் சிக்கி இருக்கிறார்.

அனிருத் 19 வயதாக இருக்கும் போது 25 வயதான ஆண்ட்ரியா உடன் காதலில் இருந்தார். சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. இது தொடர்பாக இருவருமே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்

அதுமட்டுமின்று அனிருத், ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுசி லீக்ஸ் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தொகுப்பாளினி டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் அவர், "நான் பேட்டி எடுக்கும் போது அதில் விருந்தினராக அனிருத் கலந்துகொண்டார். அப்போது டாக் பேக்-கின் வழியாக அனிருத்திடம் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக கேள்வி கேளுங்கள்" என்று சொன்னார்கள்.

"அது ரொம்ப தனிப்பட்ட விஷயம் என்பதால் அந்த கேள்வியை கேட்க தயங்கினேன். இந்த கேள்வியை கேட்க அனிருத் ஓகே சொல்லிவிட்டார். இருப்பினும் தயக்கமாக இருந்தது. கடைசி வரை அந்த கேள்வி கேட்கவில்லை” என்று டிடி கூறியுள்ளார். 

அனிருத் ஓகே சொல்லியும் அந்த விஷயத்தை செய்யாத டிடி.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!! | Dhivyadharshini Talk About Aniruth