தல தோனியும் தளபதி விஜய்யும் ஒரே வழியில்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய மென்டருமான M.S.தோனி எத்தனையோ வெற்றிகளை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
அத்தனை சாதனைகளை அவர் நிகழ்த்தியிருந்தாலும் அதையெல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாதவர். அதுவே அவரை கேப்டன் கூல் என அவரது ரசிகர்கள் அவரை அழைக்க காரணமாக இருக்கிறது. எளிமையின் அடியாளமாகவும் கருதப்படுகிறார்.
ஆட்டம் முடிந்து தனது அணியின் வெற்றியை பதிவுசெய்துவிட்டு கோப்பையை கைப்பற்றி மைதானத்தில் நுழைந்ததுமே அதனை அணியிலுள்ள மற்றொரு வீரரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வாடிக்கையை கொண்டவர்.
தற்போது அப்படி ஓர் புகைப்படத்தை தான் நடிகர் விஜய்யோடு ஒப்பிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் சார்பில் சமீபத்தில் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுடன் இணைந்து ஒரு ஓரமாக அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.