நீங்க ராஜினாமா செய்யணும் சொன்ன தேர்வாளர்கள்!! நள்ளிரவே தோனி செய்த செய்த...

MS Dhoni Virat Kohli Indian Cricket Team
By Edward Feb 14, 2026 02:45 PM GMT
Report

MS தோனி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டனாக திகழ்ந்தவர் தான் கேப்டன் கூல் தோனி. கடந்த 2017ல் திடீரென தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விராட் கோலிக்கு வழிவிட்டார்.

அப்போது MS தோனி எப்படி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்? அதற்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து முன்னாள் தேர்வாளர் ஜத்தின் பரஞ்சபே மனம் திறந்து பேசியுள்ளார்.

நீங்க ராஜினாமா செய்யணும் சொன்ன தேர்வாளர்கள்!! நள்ளிரவே தோனி செய்த செய்த... | Dhoni Captaincy Resignation Secret Former Selector

ஜத்தின் பரஞ்சபே

அதில், அன்று தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நானும் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இந்த விஷயத்தை எப்படி தோனியிடம் மிகவும் மரியாதையாக கொண்டு செல்வ்து என்று தயங்கினோம்.

கடைசியில் அவரிடம் சென்று, மகி..கேப்டன் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினோம். நாங்கள் அப்படி சொன்னதும் தோனி கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.

நீங்க ராஜினாமா செய்யணும் சொன்ன தேர்வாளர்கள்!! நள்ளிரவே தோனி செய்த செய்த... | Dhoni Captaincy Resignation Secret Former Selector

எம் எஸ் கே பிரசாத்தை பார்த்து, அண்ணா..இது மிகச்சரியான முடிவு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று மிகவும் இயல்பாக கூறினார். அதற்கு எம் எஸ் கே பிரசாத், நீங்கள் பதவி விலகுவதை எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு தரவேண்டும், அப்போதுதான் நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார். தோனியும் சரி என்றார். நாங்கள் பேசி முடித்த அன்றைய தினம் நள்ளிரவே தோனியிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், நான் கேப்டன் பதவியிலிருந்து விலக விரும்புகிறேன் என்று மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படித்தான் அந்த முடிவு அதிகாரப்பூர்வமானதாக மாறியது என்று பரஞ்சபே தெரிவித்துள்ளார். அதன்பின் விராட் கோப்டனாக மூத்த வீரராக நீடித்த தோனி, 2019 உலகக்கோப்பைக்கு பின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.