குபீர்னு சிரிப்பு வரக்கூடிய சீன் இருக்கு!! பைசன் படம் இப்படித்தான்!! ப்ளூ சட்டை மாறன்..
பைசன் படம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் படம் தான் பைசன்.
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது என்று பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பைசன் படம் எப்படி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
[
ப்ளூ சட்டை மாறன்
ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானர் கதை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அதில் நிறைய உழைப்பதற்கு தேவையில்லை. கொஞ்சம் மெனக்கெட்டாலே படம் ஹிட் தான், இப்படம் நான் லீனியர் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதுதான் படத்துக்கு மைனஸாக மாறிவிட்டது.
முதல் சீனிலேயே இந்தியாவுக்காக ஹீரோ விளையாடுகிறார் என்பதை காண்பித்துவிட்டதால் போகப்போக பெரிய சுவாரஸ்யம் இல்லை. அதேபோல் ஹீரோ விளையாடுவதை அவரது தந்தை டிவியில் பார்ப்பதையும் முன்பே காண்பித்துவிடுவதால், அந்த தந்தை கேரக்டருக்கு கதையில் நடக்கும் பிரச்சனையில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பதற்றமும் இல்லை. அவர்தான் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாரே. இப்படத்தில் இயக்குநர் ஸ்டோரி டெல்லிங்கில் கோட்டை விட்டுவிட்டார்.
குபீர்னு சிரிப்பு வரக்கூடிய சீன்
படம் முழுக்க வரவேண்டிய திக் திக் மொமண்ட்டுகளை இப்படி கதை சொல்லி கெடுத்துவிட்டார்கள். படத்தின் நீளம் பெரிய குறையாக இருக்கிறது. அதேபோல் படம் முழுக்க ரிப்பீட் சீன்கள் அதிகம் இருந்தன. இந்தக்கதைக்கு எதற்காக ஹீரோயின் என்றே தெரியவில்லை, இரண்டு சாதி தலைவர்களின் பாசிட்டிவ் பக்கத்தை காண்பித்தது நன்றாக இருந்தாலும் கதைக்கு உதவவில்லை.
அந்த இரு கேரக்டர்களும் சுய சாதியையே விமர்சனம் செய்து கொண்டது பாசிட்டிவ்-ஆக இருந்தாலும் அங்கேயும் குபீர் சிரிப்பு வரக்கூடிய சீன் இருக்கிறது. ஒரு தலைவரை ஒன்னொரு தலைவர் கொலை செய்ய முயற்சிப்பார். அட்டாக் செய்யப்பட்ட தலைவர் குற்றியிரும் குலையியுருமாய் இருக்கும்போது, இவன் பிழைத்துவிட்டால் மீண்டும் விரட்டிவிரட்டி வெட்டுவோம் என்று சொல்கிறார். இது செத்து செத்து விளையாடும் விளையாட்டு போல, நன்றாக விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழே இருக்கு என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.