ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள துரந்தர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க
ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் துரந்தர்.
இப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் என பலரும் நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், துரந்தர் பார்ட் 1 படத்தின் பட்ஜெட் மற்றும் அப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட துரந்தர் படம் உலகளவில் ரூ. 1350 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், துரந்தர் பார்ட் 2 படம் இதைவிட அதிக வசூல் செய்தால், மாபெரும் லாபம் தயாரிப்பாளருக்கும் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.