ரூ. 2400+ கோடி சொத்து மதிப்பு!! யூடியூப்பில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் 10 வயது சிறுமி
சமுகவலைத்தளங்கள் மூலம் பலரும் வீடியோக்களை பகிர்ந்து கல்லா கட்டி வருகிறார்கள். அதிலும் பலர் யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து பல கோடி சம்பாதித்து கோடீஸ்வரர்களாகியும் இருக்கிறார்கள்.
அப்படி 10 வயதிலேயே யூடியூப் சேனல் மூலம் ஆயிரம் கோடி சம்பாதித்து மில்லியனர் ஆகியிருக்கிறார் ஒரு சிறுமி. பல யூடியூப் சேனல்களை வைத்திருக்கும் டயானா (Diana Kidisyuk) என்ற சிறுமி மொத்தம் 300 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். அதிலும் Kids Diana Show சேனலில் மட்டுமே 131 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை பெற்றார்.
2400+ கோடி சொத்து மதிப்பு
அதன்மூலம் வீடியோக்களை பகிர்ந்து ஆண்டுக்கு 90 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். அப்படி அவர் சம்பாதித்ததில் 279 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை சேர்த்திருக்கிறார் சிறுமி டயானா. இந்திய மதிப்பில் ரூ. 2400 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு என்று கூறப்படுகிறது.
