தளபதி விஜய் குறித்து கேள்வி.. டென்சன் ஆகி நடிகை சிம்ரன் சொன்ன பதில்
Vijay
Simran
By Kathick
நடிகை சிம்ரன் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர். விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விக்கு பதில் கூறினார். அதில் 'விஜய் அரசியல் வருகையை எப்படி பாக்குறீங்க' என்ற கேள்விக்கு, 'விஜய்க்கு ஆல் த பெஸ்ட்' என சிம்ரன் கூறியுள்ளார்.
மேலும் 'விஜய்யால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா' என்ற கேள்விக்கு சிம்ரன் டென்சன் ஆகி 'இந்த கேள்வியை தவிர்க்கலாமே' என கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.