2-வது திருமணத்திற்கு தயாரான ஹர்திக் பாண்டியா!! காதலியுடன் நிச்சயதார்த்தமா?
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புதிய காதலியுடன் காரில் இறங்கி செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹர்திக். அதன்பின் ஒருசில மாடல் நடிகையுடன் இணைத்து பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து, தன்னுடைய புது காதலி மஹிகா சர்மாவுடன் 32வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் ஹர்திக். சமீபகாலமாக தன்னுடைய காதலியுடன் ரொமான்ஸ் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார்.
தற்போது, காதலியுடன் ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தத்தை முடிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காதலியுடன் நிச்சயதார்த்தமா
அதாவது சமீபத்தில் ஹர்திக் - மஹிகா இருவரும் பூஜை செய்து வழிப்பட்டனர். அப்போது மஹிகா கையில் மோதிரம் இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
இந்த விஷயம் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுப்பட்டு வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்களா என்பது அவர்கள் வெளியிடும் அறிவிப்பில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


