40 வருட சினிமா வாழ்க்கை!! 40 லட்சம் கூட சம்பாதிக்காத பிரபல நடிகையின் கணவர்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகை தேவயானி, 2001ல் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். மகள் இனியாவை சரிகமப சீசன் 5ல் அறிமுகப்படுத்தி போட்டியாளராகவும் பங்கேற்க வைத்துள்ளார்.
40 லட்சம் கூட சம்பாதிக்கல
சமீபத்தில் சித்ரா ராமகிருஷ்ணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராஜகுமாரன், தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக இருந்தும் 40 லட்சம் கூட சம்பாதிக்கவில்லை.
40 வருடத்திற்கு முன் அந்தியூரில் இருந்து வந்தேன். பணம் சம்பாதிக்க நிறைய வழியிருக்கிறது. ஆனால் இயற்கையான கலப்படமற்ற பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என யோசித்து தான் இதில் இறங்கினேன்.
பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இதனை யோசிக்கவில்லை, ஏனென்றால் 40 வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறேன். ஆனால் சென்னையில் இதுவரை 40 லட்சம் கூட சம்பாதித்தது கிடையாது. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.