உச்ச நடிகரின் பிளாப் படத்தை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி! பல்லிளித்த உதயநிதி, சிவா

Udhayanidhi Stalin Vijay
By Karthick Raja May 10, 2022 10:31 AM GMT
Report

நேற்று உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் விருந்தினராக கலந்துகொண்டு உதயநிதியை வாழ்த்தினார்கள்.

அந்த வரிசையில் மேடையில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, தனக்கும் உதயநிதிக்கு தெரிந்த ஒரு விஷயத்தை கூறினார். அதில் ' நானும் உதயநிதியும் கடந்த 12 ஆண்டுகளாக நண்பர்கள். அப்போது அவர் நடிகர் கூட இல்லை. அந்த சமயத்தில் ஒரு படத்தை தயாரித்திருந்தார் '.

அந்த படத்தை பார்த்துவிட்டு, இந்த படத்தை எப்படி நீங்க தயாரிச்சீங்க என்று நான் கேட்டேன். அதற்கு அவரும் எப்படினு தெரியவில்லை என்று கூறினாராம். படம் இப்படி வந்துருக்கே, என்ன பண்றது என்று அப்படத்தின் இயக்குனரிடம் கேட்டபோது, வேண்டுமென்றால் மீண்டும் படத்தை இயக்கலாமா என்று கேட்டராம். அதற்கு உதயநிதி கையெடுத்து குடும்பிட்டார் என்று கலாய்த்து பேசினார்.

இதை கேட்கும் உதயநிதி மேடையில் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். உதயநிதி தயாரிப்பாளராக இருந்தபோது, அவர் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் தோல்வியை தழுவிய திரைப்படம் விஜய்யின் குருவி. ஒரு வேலை விஜய் படத்தை தான், ஆர்.ஜே. பாலாஜி கலாய்த்தாரா என்று தற்போது சமூக வலைத்தளத்தில் கிசுகிசு எழுந்துள்ளது.