200 கோடி நஷ்டம்.. கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் தில் ராஜு எடுத்த அதிரடி முடிவு
Dil Raju
Game Changer
By Kathick
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியடைந்தது.
இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 200 கோடி நஷ்டம் என கூறப்படுகிறது. அதே போல் தில் ராஜு தயாரிப்பில் வெளிவந்த Sankranthiki Vasthunam திரைப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் லாபம் கொடுத்துள்ளதாம்.
மிகப்பெரிய நஷ்டத்திற்கு பின், அதிலிருந்து மீண்டு வரும் வகையில் Sankranthiki Vasthunam படம் லாபத்தை கொடுத்துள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் படம், தன் காலை வாரிவிட்டது. ஆனால், லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Sankranthiki Vasthunam படம் மாபெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்பதால், இனி லோ பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்கிற அதிரடி முடிவை தயாரிப்பாளர் தில் ராஜு எடுத்துள்ளாராம்.