300 கோடி வசூலித்தும் தலையில் துண்டைப்போட்ட தயாரிப்பாளர்!! ஆப்பு வைத்த அஜித்தின் துணிவு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை செய்துள்ளது.
படக்குழுவினரே இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டிருந்தாலும் 300 கோடி என்பதெல்லாம் பொய் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதாவது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் வெளியாகி 100 கோடி வசூல் செய்யும் என்றும் இதனால் 50 கோடி ஷேர் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம்.
ஆனால் அந்த பகுதியில் 13 கோடி மட்டுமே தில்ராஜுக்கு ஷேர் கிடைத்துள்ளதாம். மேலும் தமிழ் நாட்டில் வெளியீட்டு உரிமையை லலித், வாரிசு படத்தினை 60 கோடிக்கு வாங்கி வெறும் 67 கோடியில் 7 கோடி ஷேர்-ஆக பெற்றுள்ளாராம்.
அதிலும் விளம்பரம் பிரமோஷனுக்காக 5 கோடி செலவு செய்துவிட்டதால் முழு பணத்தை ஷேராக பெறவில்லையாம் லலித்.
பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வந்த விஜய்யின் மார்க்கெட் இப்படியொரு சரிவை சந்தித்ததால் தயாரிப்பாளருக்கு தலையில் துண்டைப்போடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதற்கு முழு காரணம் அஜித்தின் துணிவு படம் ஒன்றாக வெளியானது தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.