அந்த விஜய் சாராட பாடி லேங்குவேஜ் இல்ல!! மேடையில் விஜய்யை அசிங்கப்படுத்தும் தயாரிப்பாளர் தில்ராஜு
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று புகழப்படுபவருமான நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அப்படத்தினை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய்யை அசிங்கப்படுத்தி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. விஜய்யின் வாரிசு ஆடியோ லான்சின் போது நம்பர் 1, சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளி பேசியிருந்தார் தில் ராஜு.
ஆனால் தற்போது தெலுங்கு சினிமா நிகழ்ச்சியில் பைட் இல்ல, டான்ஸ் இல்ல, அதைவிட அந்த விஜய் சாராட பாடி லேங்குவேஜ் இல்ல, ஆன சூப்பர்எண்டர்டெய்ண்ட்மெண்ட் இருக்கு, சூப்பர் எமோஷ்னல் இருக்கு என்று பேசியிருக்கிறார்.
இப்படி தில்ராஜூ பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் இங்கு வந்தால் புகழ்ந்து தள்ளுவது, அங்கு போனால் கலாய்ப்பதா, மறுபடியும் இங்க வந்துதான் ஆகணும்-ல என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
#DilRaju self troll and Varisu troll.. Enna manusanyaa.. ??pic.twitter.com/erjzwjigyc
— Trollywood (@TrollywoodX) March 3, 2023