ரச்சிதா சொன்னது எல்லாம் பொய்!! விவாகரத்து குறித்து நடிகர் தினேஷ் ஓப்பன்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நன்றாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கு தினேஷும் பேட்டிகளில் இருவரும் மனம்விட்டு பேசினால் பிரச்சனை தீரும் என்று கூறியிருந்தார். இதன்பின் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவரை பற்றி வாய்த்திறக்காமலும் இருந்தார். நிகழ்ச்சிக்கு பின்பும் பிக்பாஸ் நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் ரச்சிதா, சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் மீது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
சில நாட்களாக தினேஷ் தனக்கு ஆபாசமாக செல்போனில் மெசேஜ் செய்து வருவதாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி புகாரளித்திருந்தார். காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ், விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளாராம். இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கூறி பேட்டியில் கலந்து கொண்டு விவரித்துள்ளார் தினேஷ்.
அந்த பேட்டியில், நான் ஆபாசமான வார்த்தையில் பேசவும் இல்லை மிரட்டவும் இல்லை. வழக்கறிஞர் சிலவற்றை வேண்டும் என்றே சொல்ல ரச்சிதாவை சொல்ல சொல்லி புகாரளித்திருக்கிறார். எங்கள் இருவரையும் சேர்த்து விசாரித்த போலிசாரிடம் ரச்சிதாவே, கூறியிருக்கிறார். கொரானா சமயத்தில் பணப்பிரச்சனையை சந்தித்தபோது அவரிடம் செலவுகளுக்கு அவரின் பங்கை தான் கேட்டேன்.
ஆனால் இரு வருடங்களுக்கு பின் நான் காசு கேட்கவே இல்லை என்றும் ரச்சிதாவை இரண்டு வருடங்களுக்கு பின் தான் நேரில் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். எங்களை பிரிக்க காரணமாக இருந்ததே ரச்சிதாவுக்கு டப்பிங் கொடுக்கும் பெண் தான் என தெரிவித்துள்ளார். இருவரும் பேசி முடித்த பின் அந்த புகார் அப்பவே குளோஸ் ஆகிவிட்டதாகவும் சட்டபடி விவாகரத்து பெற ரச்சிதாவிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்ததாக தினேஷ் கூறியுள்ளார்.