அசிங்கப்படுத்திய இயக்குனர்.. இந்த ஆசையில் மண்ணள்ளி போட்டுக்கொண்ட சூர்யா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை சூர்யா. சிவக்குமார் மகனாக இருந்தாலும் தன் திறமையால் இந்த உச்சத்தை தொட்டுள்ளார் சூர்யா. சமீபத்தில் 2020ல் வெளியான ஜெய்பீம் படத்திற்காக சிறந்த நடிகருக்காக தேசிய விருதினை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் அழுத சம்பவத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். கார்மெண்ட்ஸ் தொழிலதிபராக ஆசைப்பட்டு அந்த கனவில் உழைச்சிட்டு இருந்த என்னை கொண்டு வந்து நேருக்கு நேர் படத்தில் நடிக்க வெச்சிட்டாங்க.
கல்கத்தாவில் ஷூட்டிங்கின் போது எனக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை என்று மொத்த யூனிட்டே கடுப்பில் இருந்தார்கள். அப்போது லஞ்ச் பிரேக் சம்யத்தில் கல்கத்தா பிரியாணி நல்லா இருக்கு சார்-ன்னு சூர்யா, அப்படத்தின் இயக்குனர் வசந்த் சார்கிட்ட சொல்லியுள்ளார்.
அதற்கு அவர், அப்படியா நல்லா சாப்பிடு ராசா என்று கிண்டல் செய்து அசிங்கப்படுத்தி பேசினார்.
அந்த நேரம் அப்படியே கூனிக்குறுகி போனேன் என்றும் அதனால் தலையணை நனையநனைய அழுத நாள் தான். அதை இப்போ நினைத்தால் நிம்மதி தர்ற அழுகை தான் வருகிறது என்று கூறியுள்ளார்.