சூர்யா அதை செய்திருக்க கூடாது!! என்னை நம்பவில்லை.. கௌதம் மேனன் ஆவேசம்

Suriya Gautham Vasudev Menon Tamil Actors
By Bhavya Jan 19, 2025 11:30 AM GMT
Report

சூர்யா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்த இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது.

ஆனால் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் மோசமான கலெக்ஷனை பெற்றது.

சூர்யா திரைப்பயணத்தில் வெற்றிப் படங்களாக அமைந்த திரைப்படங்கள் காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களே எனவே சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணைந்தாலே அப்படம் வெற்றி என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

சூர்யா அதை செய்திருக்க கூடாது!! என்னை நம்பவில்லை.. கௌதம் மேனன் ஆவேசம் | Director About Suriya Decision

ஆனால், கௌதம் மேனன் பட வாய்ப்பை சூர்யா நிராகரித்துள்ளாராம், இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கௌதம் மேனன் ஆவேசம் 

அதில், " துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. வேறு எந்த நடிகர் மறுத்திருந்தாலும் கவலையில்லை, சூர்யா மறுத்ததுதான் பெரிய வருத்தம். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை இயக்கிய என்னை அவர் நம்பியிருக்கலாம்" என கௌதம் மேனன் கூறியுள்ளார்.  

சூர்யா அதை செய்திருக்க கூடாது!! என்னை நம்பவில்லை.. கௌதம் மேனன் ஆவேசம் | Director About Suriya Decision