கங்குவா டீமை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் அமீர்
Suriya
Ameer Sultan
Kanguva
By Tony
அமீர் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால் இவர் இயக்கிய ஆதிபகவன் படத்திற்கு பிறகு 10 வருடங்களுக்கு மேல் படம் இயக்காமல் உள்ளார்.
இவருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவத்திற்கும் உள்ள சண்டை எல்லாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது அவர்கள் தயாரித்த கங்குவா குறித்து அமீர் பேசுகையில், கங்குவா படத்தை எதோ ஒரு அணியினர் தாக்கி தான் தோல்வியடைந்தது போல் பேசினார்கள், அப்படி பார்த்தால் ஏன் பக்கத்து ஸ்டேட்டில் படம் ஓடவில்லை, ரசிகர்களை விமர்சனம் சொல்லக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார், ஒரு படைப்பு வெளியே வந்துவிட்டால், அது நன்றாக இல்லை என்றால் கண்டிப்பாக திட்டத்தான் செய்வார்கள் என்று கடுமையாக பேசியுள்ளார்.