இதெல்லாம் ஒரு பாட்டா நல்லா இல்லை.. இளையராஜாவை அவமானப்படுத்தி அனுப்பிய இயக்குநர்..
இசைஞானி
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து பல ஆயிரக்கணக்கான பாடலை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்து ரசிக்க வைத்து வருகிறார் இளையராஜா. அப்படி டாப் இடத்தில் இருக்கும் இசைஞானி பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து அவமானப்பட்ட கதையெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அப்பொதெல்லாம் வாய்ப்பு கிடைப்பதே கடினம். டாப் இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பக்கம் போவார்களே தவிர புதிதாக வருபவர்களை ஏற்கமாட்டார்கள் நம்பவும் மாட்டார்கள். அப்படி புதிதாக வேண்டுமானால் ஒரு தயாரிப்பாளரோ இயக்குநரோ அவரை நம்பவேண்டும்.
ரஜினியை எப்படி பாலச்சந்தர் நம்பினாரோ, அப்படித்தான் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை நம்பினார். சென்னைக்கு வந்த இளையராஜா சில இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து தன் சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரி நடத்தினார்.

அவமானப்படுத்தி இயக்குநர்
பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்க சென்றார். அப்படி 1971ல் முத்துராமனும் சரோஜாதேவியும் நடித்த உயிர் படத்தில் இளையராஜாவுக்கு இயக்குநர் சோமு என்பவர் வாய்ப்பு கொடுத்தார்.
வாய்ப்பு கிடைத்ததால் குலதெய்வ வழிபாடு செய்து ட்யூன்களை எடுத்துக்கொண்டு இயக்குநரை பார்க்க செல்ல, அங்கு அப்படத்தின் தயாரிப்பாளரும் இருந்துள்ளார்.
டியூன்களை இளையராஜா போட்டுக்காட்ட, இதெல்லாம் ஒரு பாட்டா நல்லா இல்லை என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். 5 வருடம் கழித்து பஞ்சு அருணாச்சலம் மூலம் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பட்டித்தொட்டி எங்கும் அவரின் பாடல்தான் ஒலித்திருக்கிறது.