சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் மறைவு! அதிர்ச்சியில் திரையுலகம்
90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து தன் கவர்ச்சி நடிப்பாலும் காந்த பார்வையாலும் வியக்கவைத்த நடிகையாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழில் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானதை போன்று 1981ல் இணையை தேடி படத்தில் அறிமுகமானார்.
தமிழில் எப்படி கொடிக்கட்டி பறந்தாரோ அப்படியே மலையாளத்தில் இரு மடங்கு பிரபலமானார் சில்க். அதற்கு காரணமாக இருந்தவர் இணைத்தேடி படத்தின் இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் தான். இப்படத்தினை தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் சில்க் ஸ்மிதா.
சில நாட்களாக இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
75 வயதான் ஆண்டனி ஈஸ்ட்மேன் அவர்கள் மாரட்டு காரணமாக உயிரிழ்ந்துள்ளார். மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
