மனைவி இறந்து ஒரே வருடத்தில் இரண்டாம் திருமணம்? அருண் ராஜா காமராஜ் எடுத்த திடீர் முடிவு..
சின்னத்திரை தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் அருண் ராஜா காமராஜ். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக பல ஆண்டுகள் கூட இருந்து பின் வெள்ளித்திரையில் அவருடன் காமெடி நடிகராகவும் நடித்து வந்தார்.
மனைவி சிந்துஜா
அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்து பிரபலமாகிய அவர், பாடலாசிரியராகவும், பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கத்தில் வெளியான கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கடந்த ஆண்டு அவரது மனைவி சிந்துஜா கொரானா பாதிப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை கொடுத்தது. இரு பிள்ளைகள் இருக்கும் போது மனைவியின் பிரிவு அவருக்கு பெரிய சோகத்தை கொடுத்தது.
இரண்டாம் திருமணம்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி அருண் ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி வைரலானது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.