இப்படி சொல்லிட்டு ஏன்மா டிவோர்ஸ் பண்ண? பாலாவை புகழ்ந்து தள்ளி கணவர் புராணம் பாடிய மனைவி..

director bala divorce tamilcinema muthumalar
By Edward Mar 11, 2022 04:30 PM GMT
Report

17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்கள் இயக்குனர் பாலா - முத்துமலர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா. பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக இருந்து நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் பாலா. நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனர் என்ற விருதினையும் பெற்றவர்.

இடையில் சறுக்கல்

விக்ரம் மகனை வைத்து ஒரு படத்தினை எடுக்க முயற்சி செய்து அது சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. இயக்கம் தேவையில்லை என்று சில ஆண்டுகள் விலகி இருந்தார். தற்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார். விவாகரத்து 17 வருடங்களுக்கு முன் குடும்பத்தினர் முன்னிலையில் முத்துமலர் என்பவரை திருமணம் செய்து பெண் குழந்தையும் பெற்றார் பாலா.

4 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு முடிவெடுத்தனர். தற்போது மார்ச் 5ல் குடும்ப நல நீதிமன்றம் மூலம் இருவரும் சட்டரீதியாக பிரிந்துள்ளனர்.

பாலாவை புகழ்ந்த முத்துமலர்..

விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பிறகு இருவரும் நல்லபடியாக வாழ்க்கையை நடத்தினார்களாம். பரதேசி படத்தின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த முத்துமலர் கணவர் புரானம் பாடி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியதோடு இப்படியெல்லாம் பேசிவிட்டு ஏன்மா அவருக்கு துரோகம் செய்ய முடிஞ்சது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.