நான் பேசினா யாரும் காப்பாத்த வரமாட்டீங்க!! ஜனநாயகன் பட இயக்குநர் வேதனை..

Sasikumar H. Vinoth JanaNayagan My Lord
By Edward Feb 16, 2026 02:45 PM GMT
Report

இயக்குநர் எச் வினோத்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் சிக்கல் ஏற்பட்டதால் படம் தள்ளிப்போயுள்ளது. இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நான் பேசினா யாரும் காப்பாத்த வரமாட்டீங்க!! ஜனநாயகன் பட இயக்குநர் வேதனை.. | Director H Vinoth Said No One Will Come To Save Us

மறுதணிக்கைக்கு படக்குழுவினர் படத்தை அனுப்பியுள்ளதால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் ஜனநாயகன் படம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வெளியாக வாய்ப்பில்லை என்று கனடாவில் படத்தை வெளியிடும் யோர்க் சினிமா விநியோக நிறுவனம் அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தது.

நான் பேசினா யாரும் காப்பாத்த வரமாட்டீங்க!! ஜனநாயகன் பட இயக்குநர் வேதனை.. | Director H Vinoth Said No One Will Come To Save Us

யாரும் காப்பாத்த வரமாட்டீங்க

இந்நிலையில் சசிகுமார் நடித்த மை லார்ட் படத்தை பார்த்த எச் வினோத், பல ஆயிரம் வருஷமா பேசக்கூடிய அரசியல் இருக்கிறது. இப்படத்திற்கு முத்து சிற்பு(சசிகுமார் ரோல்) நிறைய அரசியல் பேசியிருக்கிறார்.

அவர் நிறைய குத்து வாங்கும், தமிழ் மூத்த பத்திரிக்கையாளர்கள் வந்து அவரை காப்பாற்றுகிறார்கள். பல இப்படத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள். ஆனால், அதை நான் பேசினால் காப்பாற்றுவதற்கு யாரும் வரமாட்டீங்க என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் எச் வினோத்.