ஹிட் கொடுத்த இயக்குனரையே தூக்கி எறிந்த லிட்டில் தளபதி

director hero
By Jeeva Oct 10, 2021 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் துரோகம் என்பது புதிதல்ல. அந்த வகையில் அப்படி ஒரு விஷயம் தான் இங்கு நடந்துள்ளது.

ஆனால், யார் யாருக்கு துரோகம் செய்தார்கள் என்று தெரியவில்லை, ஏனெனில் தற்போது அந்த இயக்குனர் பார்வை மட்டு வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் லிட்டில் தளபதி என்று அழைக்கப்படும் வளர்ந்து வரும் அந்த நடிகர், ஆரம்பக்காலத்தில் நடித்த சங்கம் படம் மெகா ஹிட் ஆனது.

ஏன் அந்த நடிகரின் திரைப்பயணத்தையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

மீண்டும் இவர்கள் கூட்டணியில் வந்த படம ஹிட் அடிக்க, மூன்றாவதாக இணைந்த படம் படுதோல்வி அடைந்தது. 

இதனால் இந்த இரண்டு கூட்டணி பிரிய, சமீபத்தில் சங்கம் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என கேட்க அதற்கு அந்த இயக்குனர் வேறு நாயகனை வைத்து எடுப்பேன் என்றார். இதனால் இருவருக்கும் சண்டை உறுதியாகிவிட்டது.சரி இயக்குனர் இப்படி சொல்லிவிட்டார், ஹீரோ என்ன சொல்றார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.