Dude பட சர்ச்சைக்குரிய அந்த சீன்.. இயக்குநரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

Tamil Cinema Pradeep Ranganathan Dude
By Bhavya Oct 26, 2025 05:30 AM GMT
Report

Dude

அறிமுக இயக்குநரான கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த படம் Dude. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஜோடியாக நடிக்க சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Dude பட சர்ச்சைக்குரிய அந்த சீன்.. இயக்குநரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்! | Director Open About Dude Adult Scene

சர்ச்சைக்குரிய சீன்!

இந்நிலையில், மமிதா தன் காதலை கூறும் காட்சியில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பிட்டு பட சீன் டயலாக் குறித்து இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், " நான் என் நண்பர்களிடம் இப்படி தான் பேசுவேன். ஆண் நண்பர்கள் பொதுவாக இவ்வாறு பேசுவது வழக்கம் தான்.

அது போன்று, சிறு வயது முதல் பழகும் ஒரு பெண் தோழியிடம் இவ்வாறு பேசுவதை அவள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார். அதற்கு முக்கிய காரணம் அந்த பெண்ணை ஒரு ஆண் போன்று தான் நினைத்து பழகுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மோசமான டயலாக்கை வைத்துவிட்டு இப்படி இயக்குநர் முட்டு கொடுக்கிறாரே' என்று கீர்த்தியை விளாச ஆரம்பித்திருக்கிறார்கள். 

Dude பட சர்ச்சைக்குரிய அந்த சீன்.. இயக்குநரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்! | Director Open About Dude Adult Scene