விஜய்யை ஃபாலோ செய்தாரா கீர்த்தி சுரேஷ்!! சர்ச்சை முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் எண்ட்ரியாகி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 2024 டிசம்பர் 12 ஆம் தேதி, 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சி சென்றுள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பொன்ராம்
இந்நிலையில் ரஜினி முருகன் படத்தின் இயக்குநர் பொன்ராம் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கீர்த்தி சுரேஷ் பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு ரொம்பவே பிடித்த ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். அவரிடம் பிடித்த விஷயமே அந்த மேனரிசம் தான்.
ரஜினி முருகன் படத்தின் உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷ், விஜய்யை ஃபாலோ செய்தார் என்று எல்லோரும் சொன்னார்கள். அது தவறான புரிதல் என்றுதான் நான் கூறுவேன். கீர்த்தி சுரேஷின் ஒரிஜினர்ல் மேனரிசமே அதுதான்.
அதனால் தான் அந்த பாடலில் அதை வைக்க சொல்லி பிருந்தா மாஸ்டரிடம் கேட்டோம். கீர்த்தி, திறமையான நடிகை, யாரையும் ஃபாலோ செய்து அவர்களை போல் நடிக்க வேண்டும் என்று அவர் நனைத்தது இல்லை என்று இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.