பிரச்சனைகளை மீறி மகளின் திருமணத்தை முடிக்க ஆர்வம்! இயக்குநர் சங்கரின் மாப்பிள்ளை இவரா?

marriage daughter shankar
By Edward Jun 23, 2021 01:59 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். முன்னணி நடிகர்களை இயக்கிய சங்கர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி, எந்திரன், 2.0 படத்தினை இயக்கி பிரம்மிக்க வைத்தார்.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் சில பிரச்சனைகளால் தடை ஏற்பட்ட நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் படத்தினை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் சங்கரின் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி ஓனரின் மகன் தான் மாப்பிள்ளை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக தனது மகளின் திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சங்கர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர்கள் இணையத்தில் தெரிவித்துள்ளார்.