இரண்டு மகள்களால் கண்ணீர் வடிக்கும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்!! என்ன நடந்தது..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் 2. 0 படத்திற்கு பின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் ஜேஞ்சர் படங்களின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி தனக்கான ஒரு அடையாளத்தை வைத்திருக்கும் சங்கர், தன் இரு மகள்களை நினைத்து துயரத்தில் இருக்கிறாராம்.
மூத்த மகள் ஒரு பக்கம் இருக்க இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். என்னதான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தாலும் மகளின் அடம்பிடிக்கும் குணத்தால் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஒரிரு படத்தில் நடித்து முடித்து மருத்துவ தொழிலை பார்ப்பார் என்று சங்கர் நம்பி இருந்திருக்கிறாராம்.
மகள் ஆராத்யா மூலம் கணவருடன் விவாகரத்துக்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்.. வைரலாகும் வீடியோ..
ஆனால் அப்பாவிற்கே தெரியாமல் ஒருசில படங்களின் கதைகளை கேட்டு கமிட்டாகியிருக்கிறார் அதிதி சங்கர். நடிச்சது போதும் திருமணம் செய்து கொள் என்று சங்கர் கூறியும் பேச்சை கேட்காமல் நடிக்கத்தான் போகிறேன் என்று ஒற்றைக்காலில் இருந்து வருகிறார் அதிதி. இப்படி இரு மகள்களும் தன் பேச்சை கேட்காததால் இருவரை பற்றியும் கவலைப்படாமல் படங்களை ரிலீஸ் செய்ய மும்முரமாக வேலை பார்த்து வருகிறாராம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.