சிங்கிள் டீ பிரச்சனை..வாக்குவாதம் செய்து ஓடிய அமலா பால்!! இயக்குநர் ஓபன் டாக்..
Amala Paul
Oviya
Tamil Actress
By Jai
இயக்குநர் சற்குணம்
களவானி, வாகை சூட வா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் அளித்த பேட்டியொன்றில் தன் படத்தின் நடிகைகள் ஓவியா, இனியா மற்றும் வெளியேறிய அமலா பால் பற்றி பகிர்ந்துள்ளார்.

ஓவியாவுக்கும், இனியாவுக்கும் வேறு பெயர்கள் தான், நான் தான் அப்பெயரை வைத்தேன். வாகை சூட வா படத்தில் முதலில் அமலா பால் தான் ஹீரோயினாக கமிட்டானார்.
அமலா பால்
படத்தில் டீ ஆற்றும் சீன் வரும். அந்த சீனுக்கு ஒத்திகை பார்க்க வேண்டும் என்று நான் சொன்னேன். நன்றாக ஆற்ற வேண்டும் என்பதற்காக ரிகர்சல் அவசியம் என்று கூறினேன். ஆனால் அவரோ டீ ஆற்றுவதற்கு எல்லாம் ரிகர்சலா என்று கேட்டார்.

அந்த ஒத்திகையை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், ஆனால் அவரோ ஒத்துக் கொள்ளவே இல்லை. அதன் காரணமாக அப்படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என்று சற்குணம் தெரிவித்துள்ளார்.