நடிகர்களுக்கு இணையாக சொத்து மதிப்பு! இயக்குநர் சங்கரின் பிரம்மாண்டம் இதுதான்..

shankar indian2 networth
By Edward Jul 01, 2021 03:38 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து பல கோடி வாங்கும் இயக்குநர் இடத்தை தக்கவைத்து வருபவர் இயக்குநர் சங்கர். நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் கோடிகளில் புறள வைத்த படங்களுக்கு சொந்தக்காரர் சங்கர்.

அந்தவகையில், கமல் ஹாசனினுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்தும் வருகிறார். இதைமீறி சில தினங்களுக்கு முன் மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணத்தை முடித்து வைத்தார்.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தாலி எடுத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர் தம்பதியினர். திருமணத்திற்காக அலங்காரமே 10 கோடி செலவானது என்று கூறியுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் சங்கர் நடிகர்களுக்கு இணையாக சொத்து மதிப்புகளை வைத்துள்ளாராம்.

படம் ஒன்றில் 25 கோடி வாங்கும் இயக்குநர் சங்கர், 150 கோடி சொத்து இருக்கிறதாம். ஆண்டு வருமானமாக 2020ஆம் ஆண்டில் 32 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் சங்கர். தற்போது டோலிவுட் ராம் சரண், பாலிவுட் ரன்வீர் சிங் என இன்னும் மார்க்கெட்டை ஏற்றுவார்.