மாரடைப்பால் காலமானார் இயக்குநர் வேலு பிரபாகரன்.. ஷாக்கிங் நியூஸ்
Tamil Cinema
Death
By Kathick
திரையுலகில் மூத்த இயக்குநர்களில் ஒருவர் வேலு பிரபாகரன். இவர் 1980ல் வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் எனும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
பின் நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.
இந்த நிலையில், மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த வேலு பிரபாகரன் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.
இவருடைய வயது 68. மூத்த கலைஞரான இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. ரசிகர்களும், திரையுலக சேர்ந்தவர்களும் சோசியல் மீடியாவில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.