தேவயானி கணவரால் உடம்பு சரியில்லாமல் போன இயக்குநர்!! அவரே சொன்ன உண்மை..
ராஜகுமாரன்
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்து நீ வருவாய் என என்ற படத்தின் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் ராஜகுமாரன். நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜகுமாரன், சினிமாவில் இருந்து தொழில்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

சமீபகாலமாக அவர் அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ராஜகுமாரன் பற்றி அவரது குருநாதர் இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கும் விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
விக்ரமன்
அதில், ராஜகுமாரன் வீட்டில் இருந்து சிக்கம் எல்லாம் கொடுத்துவிடுவார்கள். அவர் வீட்டு தோசையும் அருமையாக இருக்கும். அதை கன்னாபின்னா வென சாப்பிட்டு என் உடலில் சர்க்கரை ஏறியதுதான் மிச்சம்.

ஒருமுறை மருத்துவமனையில் என்னை அனுமதித்தார்கள். அப்போதெல்லாம் எனது மகன் ராஜகுமாரனை, அங்கிள் அங்கிள் என்று கூப்பிடுவான். அந்நேரத்தில் அவர் ரொம்பவே உதவியாக இருந்தார் என்று விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.