சரக்கடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்க்கு சென்ற சூப்பர் ஸ்டார்!! செருப்பால் அடிப்பேன்னு மிரட்டிய இயக்குனர்..

Rajinikanth Gossip Today
By Edward Jun 17, 2023 11:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு பல கோடிக்கணக்கான ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைல்ஸ்-ஆன நடிப்பால் ஈர்த்து வரும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்தையே மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் நபர் ஒருவர் மட்டும் தான். அவர் கே பாலசந்தர். அவரால் தான் தற்போது சினிமாவிற்கு சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார்.

சரக்கடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்க்கு சென்ற சூப்பர் ஸ்டார்!! செருப்பால் அடிப்பேன்னு மிரட்டிய இயக்குனர்.. | Director Who Said He Will Beat Rajini With Sandal

அப்படிப்பட்ட பாலசந்தர் தன்னை செருப்பால் நடிப்பேன் என்று திட்டிய சம்பவத்தை ரஜினிகாந்த் ஒரு மேடையில் கூறியுள்ளார். 1970 களில் பாலச்ச்நதர் படபிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அப்போது மது அருந்திக்கொண்டிருக்கும் பொது தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பாலசந்தர் வரச்சொல்லியிருக்கிறார். என்ன செய்வது என்று முழித்து கிளம்பி சென்றுள்ளார் ரஜினி. மது அருந்தியை மறைத்து சென்றும் அதை பாலசந்தர் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்.

உடனே பாலசந்தர் ரஜினியிடம், உனக்கு நாகேஷ் பற்றி தெரியுமா. அவர் நடிப்பிற்கு நீ ஒன்றுமே கிடையாது. அப்படி அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வீணாகியது போல் நீயும் ஆரம்பித்துவிட்டாயா என்றும் இனி நான் இப்படி ஒரு நிலையில் பார்த்தேன் செருப்பால் நடிப்பேன் என்று மிரட்டியும் சென்றுள்ளாராம்.

இதனை பெருமையுடன் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் கூறியிருந்தார்.