திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு!! குற்றவாளிகள் இருவரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.
கடந்த வாரம் திஷா பதானி வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருச்சக்கர வாகத்தில் வந்தா 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பத்திற்கு கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த கோல்வி பிரார், ரோஹித் கோதாரா என்பவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
தங்களுடைய துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாசார்யா மகாராஜ் ஆகியோரை திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி இழிவுப்படுத்தியதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இன்னொரு முறை யாராவது எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பேசியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
என்கவுண்டர்
இந்நிலையில், திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் ரவிந்திரா, அருண் இருவரையும் போலிசார் தேடி வந்துள்ளனர்.
இருவரையும் மூன்று மாநில சிறப்புப்படை போலிசார் சுற்றிவளைத்து கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, இருவரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பதிலுக்கு போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவரும் பலியாகினர்.