திஷா பதானி குடிக்கும் தண்ணியின் விலை இவ்வளவா?

Bollywood Indian Actress Water Disha Patani Actress
By Jai Oct 29, 2026 02:15 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை திஷா பதானி, சூர்யாவின் கங்குவா படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். நடிப்பை தாண்டி விளம்பரங்கள், கிளாமர் போட்டோஷூட் என்று ஆக்டிவாக இருக்கும் திஷா பயன்படுத்தும் குடிக்கும் தண்ணீர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திஷா பதானி குடிக்கும் தண்ணியின் விலை இவ்வளவா? | Disha Patani Is Claimed To Drink This Luxury Water

பிளிங் எச்-2O

திஷா குடித்து வரும் தண்ணீர் சாதாரணமானது கிடையாதாம். உலகின் மிகவும் விலையுயர்ந்த பிரத்யேகமான குடிநீராம். வாரத்திற்கு சுமார் 5 முறை பிளிங் எச்-2O குடிநீரைத் தான் திஷா அருந்தி வருகிறாராம். குடிநீரின் விலை 750 மி.லி பாட்டில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இந்த குடிநீரைத்தான் அருந்துகிறாராம். பிளிங் எச்-2O குடிநீர் அமெரிக்காவின் டென்னசி பகுதியிலுள்ள இயற்கை ஊற்றுகளிலிருந்து எடுக்கப்படுகிரறது.

திஷா பதானி குடிக்கும் தண்ணியின் விலை இவ்வளவா? | Disha Patani Is Claimed To Drink This Luxury Water

இது ஓசோன், புற ஊதாக் கதிர்கள், மைக்ரோ ஃபில்டரேஷன் உள்பட 9 அதிநவீன சுத்திகரிப்பு நிலைகளை கடந்து பாட்டிலில் அடைக்கபடுகிறது. இதன் சிறப்பு அம்சமே பேக்கிங் செய்யப்படுவதுதான். பிரத்யேகமான கண்ணாடி பாட்டில்கள் கைகளால் பதிக்கப்பட்ட அசல் சுவரோவ்ஸ்கி படிகளால் அலங்கரிப்பட்டு இருக்குமாம். இந்த தண்ணீர் பாட்டில் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.